மூத்தோரை நேரில் சென்று பார்ப்பதும் புண்ணியமே!

காமெடியின் அடையாளம் கவுண்டமணி! இன்று டிவியில் எந்த சேனலை திருப்பினாலும், டி.வி பொட்டியெல்லாம் தானாகவே நகருமளளவுக்கு உதைத்துக் கொண்டிருக்கிறார் கவுண்டர். நிலக்கரியின் அருமை வைரம் ஆகும் போதுதான் தெரியும் என்பதைப்போல, ஒரு காலத்தில் அடிக்கிறாரு… உதைக்கிறாரு… என்று அவரைய்குறை சொன்ன வாய் எல்லாம் இன்று, “கவுண்டரைப்போல வருமா?” என்று பேச ஆரம்பித்து இருக்கிறது. இந்த நேரத்தில் சொல்லி வைத்தமாதிரி எல்லாக்ஹீரோக்களுக்கும் “எனக்கு கவுண்டமணி அண்ணன் கூட நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கணும்” என்று பேட்டி தருகிறார்கள் மற்றும் ஆசைப்படுகிறார்கள். தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன்  எல்லாம் அவரது பரம விசிறிகள்.ஆனால் அதற்கும் நேரம் ஒதுக்கி நேரில் சென்றால் தானே நடக்கும்? கவுண்டரே வீட்டுக்கு வீடு டோர் டெலிவரியாக வருவாரா என்ன? “நான் இன்னைக்கு இந்தளவுக்குச்சிரிக்க சிரிக்க பேசுறேன்னா அதுக்கு இன்ஸ்பிரேஷன் கவுண்டர் அண்ணன்தான்” என்று தனது பேட்டி ஒன்றில் கூறிய சிவ கார்த்திகேயன், அதற்கு என நேரம் ஒதுக்கி அவரைச்சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார். “தம்பி… உன் படமெல்லாம் பார்க்குறேன். நல்லா வருவே” என்று வாழ்த்தினாராம் அவர்..பொதுவாகவே தன்னை விட மூத்தவர்களை சாதித்தவர்களை நேரில் சென்று சந்திப்பது நல்ல விஷயம் என்று நம்புகிறவர் சிவ கார்த்திகேயன். ஊரே கூடி நின்று பரவை முனியம்மாவுக்கு பன்னீர் தெளிப்பதற்கும்முன்பே, நைந்து கிடக்கும் அவரை சந்தித்து சைலண்ட்டாக உதவிசெயதவர் சிவகார்த்திகேயன். மூத்தோர் சொல் கேட்பது மட்டுமல்ல, மூத்தோரை நேரில் சென்று பார்ப்பதும் புண்ணியமே!

தர்மம் செய் ஆனால் மோட்சம் கிடைக்காது?!

மோட்ஷத்தை அடைய வேண்டுமானால் தர்மம் (புண்ணியம்) செய் என கண்ணன் அர்ச்சுனனுக்கு சொல்கிறான். அப்போது அர்ச்சுனன் "தர்மம் செய்தால் அதன் பலம் எனக்கு கிட்டிவிடுமே, அப்புறம் நான் மோட்சத்துக்கு போவது எப்படி?" என்று கேட்டான். அப்படியானால் தர்மம் செய்யாதே என கண்ணன் சொன்னான். தர்மம் செய்யாமலிருந்தால் மோட்ஷம் போக முடியாதே என்றான் அர்ச்சுனன். சிலர் நினைக்கக் கூடும் 'இதென்ன கண்ணன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறானே, தர்மம் செய் என்கிறான், பின் செய்யாதே என்கிறான்'.... கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். மோட்ஷத்தை கொடுப்பவன் நானே. மோட்சத்துக்கு உன்னை அனுப்ப வேண்டுமானால், எனக்குப் பிடித்ததை நீ செய்யவேண்டும். ஆனால் அதை உன்பொருட்டு செய்யக்கூடாது. அதாவது தர்மத்தை செய், ஆனால் 'நான் செய்கிறேன்' என்ற நினைப்பில்லாமல் செய். தர்மத்தை செய் ஆனால் அதன் பலத்தை என்னிடம் விட்டுவிடு. இதுவே "சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து"

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதன் பொருள் என்ன?

கோபுரம் இறைவனின் திருவடி என்கிறது ஆகமம். அதனால்தான் எங்கிருந்து பார்த்தாலும் அந்த கோபுரம் தெரியும்படியாக மிக உயரமானதாக கோபுரத்தை கோவிலில் அமைந்திருக்கிறார்கள்.  ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும்தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்த சொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானகோடி ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தரிசிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதே ராஜகோபுரங்கள். ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே அந்த ஊரில் அமையப்பெற்ற ஆலயத்தின் கோபுரம் நம் கண்ணில் படும் போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித பக்தி உணர்வு தோன்றுகிறது. கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொள்கிறது.

அந்த ஆலயத்தினுள் உறைந்திருக்கும் இறைசக்தியே கோபுரத்திலும் எதிரொலிக்கிறது.  கோபுர தரிசனம் என்பது மேலோட்டமாக செய்திகளைத் தெரிந்து கொள்வது. உள்ளிருக்கும் சங்கதிகளை முழுமையாக உணர ஆலயத்திற்குள் சென்று உள்ளிருக்கும் இறைவனையும் தரிசித்தால்தான் முடியும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிட்டுவதில்லை. அதே நேரத்தில் அனைத்து தரப்பு பக்தகோடிகளுக்கும் கோபுர தரிசனம் என்பது எளிதில் கிடைப்பதால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.

இயற்கை சீற்றத்திலிருந்து தப்ப யாகம்
மகாருத்ரம் , சுதர்சன யாகம், சண்டி யாகம் என பல யாகங்கள் இருக்கிறது

கோடி மடங்கு புண்ணியம் வேண்டுமா?
கோடி மடங்கு புண்ணியம் வேண்டுமானால் திருவாதிரை நட்சத்திரத்தன்று  திருவண்ணாமலை கிரிவலம் போங்க! 240 கோயில்களில் ஓர் ஆண்டுக்கு தினமும் நாம் பூஜை செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த மொத்த பலனும் ஒருமுறை திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதால் கிடைக்கிறதாம்! ஒரு முறை கிரிவலம் வந்தாலே நம் முன்வினைகள் தீவினைகள் எல்லாம் நீங்கி விடுகிறதாம்.

கடன் தொல்லை நீங்க
நோய் தொல்லை நீங்க
எதிரிகளின் தொல்லை நீங்க
நியாயம் கிடைத்திட

கல்யாணம் தடைபடாமல் இருக்க திருமண தடை நீங்கிட
சிவ பெருமான் அவதார நட்சத்திரம் திரு ஆதிரை திருவாதிரை. இந்த நட்சத்திரநாளில் கிரிவலம் செல்வது மற்ற நாட்களில் கிரிவலம் செல்வதைப்போல பலகோடி மடங்கு புண்ணியம் கிடைக்கஆரம்பிக்கும்! (நமது அம்மா அப்பாக்களின் ஐந்து தலைமுறை முன்னோர்களின் பாவங்களையும் புண்ணியங்களையும் நாம் அனுபவிக்கிறோம். )